பாகற்காய் பிடிக்காதா உங்களுக்கு?

உணவுப் பிரியர்கள் கூட வேண்டாம் என்று ஒதுக்கும் பாகற்காயின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ள இங்கே படியுங்கள்.

பாகற்காய் பிடிக்காதா உங்களுக்கு?

சுவைகள் பின்னாடி ஓடும் நமக்கு, நன்மைகள் நிறைந்த பாகற்காய் பிடிப்பதில்லை. கசப்பு சுவை என்று காரணம் கூறி ஒதுக்கி விடுகிறோம்.  ஆனால் பாகற்காய் நமக்கு எவ்வளவு முக்கியம் என்று அறிய இங்கே தொடர்ந்து படியுங்கள் . 

 

 

 

பாகற்காய் வைட்டமின் சி, வைட்டமின் பி  , கால்சியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்களின் களஞ்சியமாகும். இந்த காய்கறி இரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகிறது. 

ஜிநீரிழிவு நோயாளியாக இருந்தால், பாகற்காயை  உணவில் சரியான முறையில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

 

 

பாகற்காய் மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ் பிரச்சனையை சமாளிக்க உதவுகிறது.

 

 

 பாகற்காய் சருமத்திற்கு சிறந்தது மற்றும் தோல் பிரச்சினைகளை குணப்படுத்த உதவுகிறது. 

 

 

பாகற்காய் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை:

 

 

நீங்கள் கொஞ்சம் கரடுமுரடான பாகற்காயை பயன்படுத்தினால், விதைகளை கண்டிப்பாக அகற்றிவிட்டு பயன்படுத்துங்கள். 

 

 

உங்களுக்கு பாகற்காயின் கசப்பு சுவை குறைய வேண்டுமென்றால், சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் உப்பு நீரில் பாகற்காய் துண்டுகளை ஊற வைப்பதன் மூலம்  கசப்பைக் குறைக்கலாம். பின்னர், அவற்றை வேறு தண்ணீரில் நன்கு கழுவி,  பயன்படுத்தவும்.